மாவட்ட செய்திகள் ஜூலை 02,2022 | 12:58 IST
தஞ்சாவூர் பெரியகோவில் உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுவிழா கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 4ம் நாளாக வாராஹி அம்மனுக்கு சந்தன அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நந்தி மண்டபத்தில் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் தவில் சக்ரவர்த்தி கோவிந்தராஜன் லயநாத இன்பம் கிருஷ்ணமூர்த்தி நாதஸ்வரம் ராம்தாஸ் வீணை வீரமணி சாக்ஸாபோன் சங்கரசுப்ரமணியன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் அம்மனை வழிபட்டு இசை நிகழ்ச்சியை ரசித்தனர்
வாசகர் கருத்து