Advertisement

மூதாட்டி, வாலிபருக்கு வலை

மாவட்ட செய்திகள் ஜூலை 02,2022 | 16:59 IST

Share

துரை மாவட்டம் சமயநல்லூரில் பிரபல நகைக் கடை உள்ளது. அங்கு மூதாட்டியுடன் வாலிபர் வந்தார். பழைய 3 பவுன் செயின், 1 பவுன் தோட்டை கொடுத்து புதிய நகை வேண்டும் என கேட்டனர். பழைய நகைகளை ஊழியர் பரமசிவம் உரசி பார்த்து ஒரிஜினல் தங்க நகைகள் தான் என உறுதி செய்தார். அப்போது வாலிபர் பழயை நகைகளை ஒருமுறை பார்த்து விட்டு தருவதாக கூறினார். அவரிடம் பரமசிவம் நகைகளை கொடுத்தார். நகையை பார்ப்பது போல் போக்குக் காட்டிய வாலிபர், அந்த நகைகளை மூதாட்டியிடம் கொடுத்து பார்க்கும்படி கூறினார். அப்போது தான் தயாராக வைத்திருந்த வேறொரு நகைகளை பரமசிவத்திடம் கொடுத்தார். அவர் பழைய நகைகளுக்கு பதிலாக புதிய 2 பவுன் சங்கிலி, 1 பவுன் தோட்டை வாலிபரிடம் கொடுத்தார். நகைகளை பெற்று கொண்டு வாலிபர், மூதாட்டியுடன் வெளியேறினார். அவர் சென்ற பின்பு வாலிபர் கொடுத்த நகைகளை பரமசிவம் மீண்டும் உரசிப் பார்த்தபோது, அது கவரிங் நகைகள் என தெரியவந்தது. நகைக் கடையில் இருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து நகை திருட்டு வாலிபர், மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X