Advertisement

செயற்கை உறுப்புகள் வழங்குவதில் தஞ்சை முதலிடம்!

மாவட்ட செய்திகள் ஜூலை 03,2022 | 14:10 IST

Share

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முடநீக்கியல் துறை சார்பில் 14 மாற்று திறனாளிகளுக்கு இலகுரக நவீன செயற்கை கால்களை தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் வழங்கினார். ரூ.13 லட்சம் மதிப்புள்ள 14 இலகுரக நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இயங்கும் செயற்கை அவையங்கள் உருவாக்கும் நிலையத்தில் செய்யப்பட்டவை. இவர்களுக்கு வழங்கிய செயற்கை கைகள் விரல்களை நீட்டி மடக்கும்படியும் பொருட்களை எடுத்து பயன்படுத்தும் படியும் இருக்கும். தஞ்சாவூர் அரியலூர் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் இவை வழங்கப்பட்டு வருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X