Advertisement

சிசிடிவியை சாக்கால் மூடி ஜூவல்லரியில் நகை திருட்டு

மாவட்ட செய்திகள் ஜூலை 03,2022 | 14:55 IST

Share

திருவாரூர் மாவட்டம், கண்கொடுத்த வணிதம் கடைத் தெருவில் கலையமுதன் என்பவருக்கு சொந்தமான ரதிமீனா ஜூவல்லரி உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் கலையமுதன் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.  இன்று காலைஜுவல்லரிக்கு அருகிலுள்ள முகமது இக்பாலின் மளிகை கடையின் பூட்டு உடைத்து கல்லாவில் இருந்த . 17,000 ருபாய் திருடப்பட்டிருந்தது. அருகிலுள்ள ஜுவல்லரியின் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கலை அமுதனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  கலையமுதன் கடையை திறந்து பார்த்தபோது ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் நான்கு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுப் போனது தெரிந்தது. கலையமுதன் கொரடாச்சேரி போலீசில் புகார் தெரிவித்தார்.போலீசார் ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் சிசிடிவியை கேமராவில் சாக்கை போட்டு மூடி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. போலீசார் தீவிர விசாரணை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X