மாவட்ட செய்திகள் ஜூலை 03,2022 | 16:38 IST
கோவை லாரி பேட்டை மீன் மார்க்கெட்டில் கடந்த வாரம் 1100 ரூபாய்க்கு விற்ற வஞ்சரம் 1200 ரூபாய், 900 ரூபாய்க்கு விற்கப்பட்ட வாவல் மீன் 1000 ரூபாயாக உயர்ந்துள்ளது. மத்தி, நெத்திலி உள்ளிட்ட சிறிய மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. கட்லா, ரோகு போன்ற டேம் மீன்கள் கிலோவுக்கு 50 முதல் 100 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கேரளாவில் துவங்கியுள்ளது. இதனால் தமிழகத்திலிருந்து மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதியாகிறது. இதனால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து