பொது ஜூலை 04,2022 | 16:54 IST
மும்பையில் நடந்த 'பெமினா மிஸ் இந்தியா 2022' Femina Miss India 2022 போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி Sini Shetty அழகி பட்டம் வென்றார். ராஜஸ்தானின் ரூபல் ஷெகாவத் 2வது இடமும், உத்தரப்பிரதேசத்தின் ஷினாதா சவுகான் 3வது இடமும் பிடித்தனர். அழகு, வசீகரம், சகிப்புத்தன்மையால் எங்கள் இதயங்களை சினி ஷெட்டி கொள்ளையடித்தார் என போட்டி நடத்திய அமைப்பினர் கூறினர். சினி ஷெட்டிக்கு வயது 21. கணக்கியல் மற்றும் நிதித்துறையில் இளங்கலை முடித்தவர். சிறந்த பரதநாட்டிய கலைஞர்.
வாசகர் கருத்து