மாவட்ட செய்திகள் ஜூலை 05,2022 | 11:46 IST
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மனைவி தனலட்சுமி, 60. சின்னதுரை ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது இரு மகள்களுக்கு திருமணமான நிலையில், மூன்றாவது மகள் ஜெயலட்சுமி, 24, காரைக்காலில் உள்ள தனியார் விவசாய கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். மார்ச் 10ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, தனலட்சுமி மகன் விக்னேஷ், 29, முந்திரி தோப்பிற்கு சென்று திரும்பி வந்து பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 110 சவரன் நகைகள், இரண்டு லட்சம் ரூபாயை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. விருத்தாசலம் போலீசார் விசாரித்தனர். திருட்டால் ஜெயலட்சுமியின் திருமணம் தடைபட்டது. போலீசார் இதுவரை நகைகளை மீட்காததால் தனலட்சுமி, மகள் ஜெயலட்சுமி, மகன் விக்னேஷ் ஆகிய மூவரும் புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில், நேற்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து