மாவட்ட செய்திகள் ஜூலை 05,2022 | 14:51 IST
தஞ்சை, ஜெபமாலைபுரம் பகுதி மாநகராட்சி குப்பை கிடங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 வீடுகளும் எரிந்து ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. தீயணைக்கும் பணி நடந்தாலும் இதுவரை தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. 2வது நாளாக குப்பை கிடங்கு எரிந்து புகை மூட்டமாக உள்ளது. குப்பை கிடங்கு தீவிபத்தால் செக்கடி,மேல அலங்கம், மேலவீதி கீழவீதி, கீழவாசல் உள்ளிட்ட இடங்கள் புகையால் சூழப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் புகை சூழ்ந்துள்ளதால் மாணவ மாணவிகளும் கண் எரிச்சலால் அவதி அடைந்துள்ளனர். தீ விபத்தில் வீடுகள் எரிந்து பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் மகேஷ், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மேயர் ராமநாதன் ஆகியோர் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினர்
வாசகர் கருத்து