மாவட்ட செய்திகள் ஜூலை 06,2022 | 12:12 IST
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மல்லப்பா வயது 70. தர்மாபுர வாழை தோட்டத்தில் மல்லப்பா நேற்று இரவு காவல் காத்தார். தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை வாழையை சேதப்படுத்தி, மால்லப்பாவை மிதித்து கொன்றது. ஒருமாதமாக சுற்றித்திரியும் யானையை துரத்தாமல் வனத்துறை மெத்தனம் காட்டியதாக மக்கள் குற்றம்சாட்டி மறியலில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து