மாவட்ட செய்திகள் ஜூலை 06,2022 | 00:00 IST
கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து ஆண்டு தோறும் இரண்டு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர் அதன்படி வலது மற்றும் இடது கால்வாய் மூலமாக விநாடிக்கு 180 கனஅடி நீர் 120 நாட்களுக்கு திறந்து விடப்பட்டது. இதன் மூலம் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், தள்ளிஅள்ளி, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, எம்பி. செல்லகுமார், EX MLA செங்குட்டுவன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் காந்தி ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டனர்.
வாசகர் கருத்து