மாவட்ட செய்திகள் ஜூலை 09,2022 | 11:34 IST
தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்தும் நடவடிக்கைகளில், தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மத்திய அமைச்சர்கள், தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு, தங்கள் துறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக, மக்களிடம் விளக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலுாரில் இன்றும் நாளையும், தமிழக பா.ஜ., செயற்குழு கூட்டம் நடக்கிறது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கும் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் என, 450 பேர் பங்கேற்கின்றனர். புதிய உறுப்பினர்களை சேர்ப்பது; தி.மு.க., அரசுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
வாசகர் கருத்து