மாவட்ட செய்திகள் ஜூலை 09,2022 | 00:00 IST
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் செந்தில் நகரில் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஓராண்டுக்கு முன் குடிவந்த ஆனந்த் என்பவர் குடும்பத்துடன் சேர்ந்து கஞ்சா விற்று வருவதாக புகார் எழுந்தது. கஞ்சா வாங்க வரும் போதை ஆசாமிகள் பெண்களிடம் வம்பிழுக்கின்றனர். பாதிக்கப்பட்டோர் பல்லடம் போலீசாரிடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து ஆனந்த் வீட்டை குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்டனர். தாமதமாக வந்த போலீசார் ஆனந்தை பிடித்து சென்றனர். அவர் மீது ஜாமினில் வரக்கூடிய வகையில் வழக்குப்பதிவு செய்தனர். அவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து