மாவட்ட செய்திகள் ஜூலை 10,2022 | 16:10 IST
திருப்பூர் மாவட்ட அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் இளம் கலைஞர்களுக்கான வாய்ப்பாட்டு, பரத நாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் 17 முதல் 35 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களை நடுவர்கள் குழு தேர்வு செய்தனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு 6 ஆயிரம் ரூபாய்; 2வது பரிசு 4,500 ரூபாய், 3 வது பரிசு 3,500 ரூபாய் வழங்கப்படும். அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர்.
வாசகர் கருத்து