மாவட்ட செய்திகள் ஜூலை 11,2022 | 15:54 IST
பெருகிவரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், 'தாய்சேய் நலத்தின் பாதுகாப்பே திட்டமிட்ட குடும்பத்தின் பொறுப்பு' என்ற மையக்கருத்தினை வலியுறுத்தி மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜுலை 11ம்நாள் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்திலிருந்து 300க்கும்; மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
வாசகர் கருத்து