மாவட்ட செய்திகள் ஜூலை 12,2022 | 12:47 IST
லாரியை திருடிய மாஜி ஊழியர் கைது திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் கணேசன். வங்கியில் கடன் பெற்று லாரி வாங்கினார். இதற்காக அவரிடம் வேலை பார்த்த சுரேஷ்குமார் ஜாமின் கையெழுத்து போட்டார். அதன் பின் அவர் வேலையை விட்டு நின்று விட்டார். தவணை தொகையை கணேசன் முறையாக செலுத்தவில்லை. இதையடுத்து ஜாமின் போட்ட சுரேஷ்குமாருக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து கணேசனிடம் சுரேஷ்குமார் கேட்டார். உன்னை யாரென்றே தெரியாது என கணேசன் கூறினார். கடுப்பான சுரேஷ்குமார் நள்ளிரவு லாரியை திருடி தப்பினார். மணப்பாறை போலீசார் சுரேஷ்குமாரை பிடித்து விசாரித்தனர். அவர் லாரியை திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து