மாவட்ட செய்திகள் ஜூலை 13,2022 | 00:00 IST
சென்னை ஜார்ஜ் டவுன் பிராட்வே சாலையில் பாரதி மகளிர் கல்லூரி உள்ளது. கோவிட் காரணமாக கடந்த 2 ஆண்டாக நேரடியாக இயங்கவில்லை. கல்லூரி வளாகத்தில் பல பொருட்கள் திருடு போனதாக புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். 85-க்கும் மேற்பட்ட ஃபேன்கள் திருடப்பட்டது தெரிந்தது. அலுவலக பீரோ உடைக்கப்பட்டு புத்தகங்கள், மோட்டார் பம்ப் உள்ளிட்ட கல்லூரிக்கு சொந்தமான பொருட்கள் திருடப்பட்டிருப்பது குறித்து விசாரித்தார். போலீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது கல்லூரி முதல்வர், போலீசார் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து