மாவட்ட செய்திகள் ஜூலை 13,2022 | 00:00 IST
கோவை நீலாம்பூரில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர் அண்ணா நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. கடை உரிமையாளர் உதயகுமாரிடம் விசாரித்த அதிகாரிகள், அவரது வீட்டை ஆய்வு செய்தனர். 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். போலீசார் உதயகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து