மாவட்ட செய்திகள் ஜூலை 13,2022 | 21:05 IST
காரைக்காலில் 63 நாயன்மார்களில் பெண் நாயனரான காரைக்காலம்மையாரின் வரலாறு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு விழா 11ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக சிவன், அடியார் கோலத்தில் வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. ஸ்ரீபிக்ஷாடண மூர்த்தியாக சிவன் வீதியுலா வரும் போது பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மாங்கனிகளை இறைத்து வழிபட்டனர். இறைக்கப்படும் மாங்கனிகளை பிடித்து உண்டால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். சிவபெருமான் பிக்ஷாடண மூர்த்தியாக காரைக்கால் அம்மையார் இல்லத்தில் உணவு அருந்த செல்லும் நிகழ்வினை குறிக்கும் விதமாக இன்றைய நிகழ்ச்சி நடந்தது. விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி,அமைச்சர்கள், எம்எல்ஏகள், கலெக்டர் முகமது மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து