மாவட்ட செய்திகள் ஜூலை 14,2022 | 17:00 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கன மழை வெளுத்து கட்டி வருகிறது. இதனால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கபினியின் கிளை நதியான பொன்னானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மழைக்கு முன்பு பொன்னானி நதி விரிவாக்கம் செய்து, துார் வாரியதால் ஊருக்குள் மழை நீர் புகாமல் தடுக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை தாசில்தார் நடேசன், டாக்டர் கதிரவன், டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் குழுவினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து