பொது ஜூலை 16,2022 | 07:20 IST
தேசிய வீட்டுவசதி வங்கி, 2007 முதல், பெரு நகரங்களில் வீடு விற்பனை பதிவு அடிப்படையில் விலைப் புள்ளிகளை, கணக்கிட்டு வெளியிடுகிறது. இந்த புள்ளிகளின் அடிப்படையில் பெரிய கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்வரும். எந்தெந்த நகரங்களில் வீடு விற்பனை அதிகரிக்கிறது என்பதை பொறுத்து, இந்த புள்ளிகள் இருக்கும். அந்த வகையில், கோவிட் ஊரடங்குக்கு பின், 50 பெரு நகரங்களில் வீடு விற்பனை விவரங்களை வெளியிடப்பட்டது. சென்னையில் நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், வீடு விற்பனைக்கான விலைப் புள்ளிகள், 7.7 சதவீதமும், கோவையில், 6.8 சதவீதமும் உயர்ந்துள்ளன. இதே காலத்தில்,டில்லியில், 3.2; கோல்கட்டாவில், 2.6; பெங்களூரில், 2.5; மும்பையில், 1.9 சதவீதம் வீடுகளின் விலைப் புள்ளிகள் உயர்ந்துள்ளதாக, தேசிய வீட்டுவசதி வங்கி தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து