பொது ஜூலை 16,2022 | 13:31 IST
சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயா அரங்கில் தினமலர் நாளிதழ் நடத்தும் 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிளஸ் 2 முடித்து இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு செல்லும் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டது. கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பிற்பற்றி ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியின் தலைவர் ஸ்ரீராம், மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினார். இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்வது குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆலோசனை வழங்கினார். ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பல கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து