பொது ஜூலை 16,2022 | 14:00 IST
கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 2 அணைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில் உபரிநீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரானது வினாடிக்கு 1லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தற்போது ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 7 வது நாளாக ஒகேனக்கல்லில் டூரிஸ்ட்கள் குளிக்கத் தடை நீடிக்கிறது.
வாசகர் கருத்து