Advertisement

கள்ளக்குறிச்சி வன்முறை 144 தடை உத்தரவு

பொது ஜூலை 17,2022 | 00:00 IST

Share

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்த மாணவி மரணமடைந்தார். இதை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளிக்குள் புகுந்த கும்பல் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடியது. கல்வீசி தாக்கினர். போலீஸ் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கு தீ வைத்தனர். 15க்கு மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். வன்முறை காரணமாக, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நயினார்பாளையம் தாலுக்காக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை கும்பலை போலீசார் வெளியேற்றி, பள்ளியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார். பள்ளி மாணவி மரணம் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X