பொது ஜூலை 18,2022 | 09:17 IST
சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி பிரபலம். அங்கு இப்போது சவாரி செய்ய 20 குதிரைகள் உள்ளன. வெளி மாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் குதிரை வைத்திருப்பவர்களுக்கு சீருடை வழங்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முடிவு செய்தார். அவர்களது போட்டோ, தனிப்பட்ட விவரங்கள் மெரினா காவல் நிலையத்தில் பெறப்பட்டது. போட்டோவுடன் கூடிய ஐடி கார்டும் தயார் செய்யப்பட்டது. குதிரைகாரர்களுக்கு சீருடை, ஐடி கார்டை உதவி கமிஷனர் சீனிவாசன் வழங்கினார்.
வாசகர் கருத்து