அரசியல் ஜூலை 18,2022 | 12:02 IST
பொள்ளாச்சி அடுத்த திவான்சாபுதுாரில் பா.ஜ மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. அது முடிந்த பின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேட்டி அளித்தார். வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஒரு பிரச்னையை தொடங்கி இருக்கிறார். 'தமிழகத்தில் தமிழக வணிகர்கள் மட்டுமே தொழில் செய்ய வேண்டும்; மற்ற மாநில வணிகர்கள் வெளியேற வேண்டும்' என பேசியுள்ளார். இதனால், மற்ற மாநிலங்களில் தொழில் செய்யும் தமிழக வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த தி.மு.க அரசியல் சதி செய்கிறது. அதன் எதிரொலிதான் இந்த அடாவடி பேச்சு என சேகர் சொன்னார்.
வாசகர் கருத்து