மாவட்ட செய்திகள் ஜூலை 19,2022 | 00:00 IST
75 ஆவது சுதந்திர தின அமுத பெரு விழாவையொட்டி ஒரு வாரம் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆலோசனை கூட்டம் , வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய கலெக்டர் குமாரவேல் பாண்டியன்,ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு வீடு, அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அனைத்து உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டார்
வாசகர் கருத்து