மாவட்ட செய்திகள் ஜூலை 20,2022 | 15:38 IST
கோவை ஒய்.எம்.சி.ஏ. சார்பில் 66 வது மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து மைதானத்தில் துவங்கியது. மாணவ, மாணவிகளுக்கான மினி பாய்ஸ், ஜூனியர் பாய்ஸ், ஆண் மற்றும் பெண்கள் என நான்கு பிரிவுகளில் நடக்கும் போட்டியில் 30 அணிகள் பங்கேற்றன. முதலாவது போட்டியில் பெர்க்ஸ் பள்ளி அணி 52-42 என்ற புள்ளி கணக்கில், கே.கே.நாயுடு பள்ளி அணியை வென்றது. 2வது போட்டியில் ஆர்.கே.எஸ்., அணி, 57-44 என்ற புள்ளி கணக்கில், சுகுணா பிப்ஸ் பள்ளி அணியை வென்றது. 3வது போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி அணி 61-42 என்ற புள்ளி கணக்கில், விஸ்வதீப் பள்ளி அணியை வென்றது. 4வது போட்டியில் எஸ்.வி.ஜி.வி. பள்ளி அணி, 75-45 என்ற புள்ளி கணக்கில், பாரதி பள்ளி அணியை வென்றது. இப்போட்டிகள் ஜூலை 31 ம் தேதி நிறைவடைகிறது.
வாசகர் கருத்து