மாவட்ட செய்திகள் ஜூலை 20,2022 | 00:00 IST
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பழமையான கெளமாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இக்கோயிலில் ஆனி பெருவிழா கடந்த 11 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து