மாவட்ட செய்திகள் ஜூலை 20,2022 | 00:00 IST
புதுவையில் சில ஆண்டுகளாக வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருகிறது. ரவுடிகள் தங்களது எதிர் கோஷ்டியை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். முதலில் வெடிகுண்டு வீசி எதிராளிகளை நிலைகுலைய செய்து விட்டு பின்னர் அரிவாளால் வெட்டி கொல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. புதுவையில் நடக்கும் பெரும்பாலான கொலைகள் இந்த பாணியை பின்பற்றியே நடக்கின்றன. சில நாட்களாக வெடிகுண்டு சம்பவங்கள் கட்டுக்குள் இருந்தன இந்நிலையில் நேற்று நள்ளிரவு லாஸ்பேட்டைதொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் வீடு அருகே பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் விபரீதம் நடந்ததாக கருதி வெளியே வர பயந்தனர். சிலர் துணிந்து வெளியே வந்து பார்த்தனர். வெடிகுண்டு வெடித்த இடம் புகை மண்டலமாக காட்சியளித்தது. மர்ம நபர்கள் வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்தது. வைத்தியநாதன் எம்.எல்.ஏ.வை கொல்லும் முயற்சியில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது அவரை மிரட்டுவதற்காக வெடிகுண்டை வீசி சென்றார்களா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து