மாவட்ட செய்திகள் ஜூலை 21,2022 | 13:29 IST
கோயம்பேடு பஸ் நிலையத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற 3 வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கணேசன், சுந்தரம், மாரி செல்வன் என்பது தெரிந்தது. விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு எடுத்து சென்று சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
வாசகர் கருத்து