Advertisement

உலக புலிகள் பாதுகாப்பு தின ஓவிய போட்டி

மாவட்ட செய்திகள் ஜூலை 21,2022 | 15:16 IST

Share

உலக புலிகள் பாதுகாப்பு தினம் ஜூலை 29 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் உலக புலிகள் பாதுகாப்பு தின விழா வரும் 29 ம் தேதி மசினகுடியில் நடக்கிறது. இதனை முன்னிட்டு வனத்துறை சார்பில் மசினகுடியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே வன மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஓவிய போட்டிகள் மற்றும் புலிகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் கட்டுரை, பேச்சு போட்டிகள் வனச் சரகர்கள் பாலாஜி, ஜான் பீட்டர் தலைமையில் நடந்தது. இப்போட்டிகளில் ஒன்பது பள்ளிகளை சேர்ந்த 300 மாணவ மாணவியர் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தினார். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வரும் 29ம் தேதி மசினகுடியில் நடைபெறும் உலக புலிகள் பாதுகாப்பு தின விழாவில் பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X