மாவட்ட செய்திகள் ஜூலை 21,2022 | 15:43 IST
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி ஈஷா யோக மைய சுற்றுப்புற பகுதிகளான மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார், கோயில்பதி, தானிக்கண்டி பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மக்கள் ஈஷா மையத்தை சுற்றியுள்ள இடங்களில் வேலை செய்கின்றனர்.. குழந்தைகள் உட்பட 41 பேர் தங்கள் சொந்த செலவில் முதன் முறையாக கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை 2 நாள் தங்கி இருந்து சுற்றிப்பார்த்து விட்டு ரயில் மூலம் கோவை திரும்புகின்றனர். இந்த பயணத்தை ஈஷா மைய நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.
வாசகர் கருத்து