மாவட்ட செய்திகள் ஜூலை 21,2022 | 00:00 IST
கோவை ஒய்.எம்.சி.ஏ. சார்பில் 66 வது மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து மைதானத்தில் நடக்கிறது. இதில் மினி பாய்ஸ், ஜூனியர் பாய்ஸ், ஆண்கள் மற்றும் பெண்கள் என நான்கு பிரிவுகளில் நடக்கும் போட்டியில் 30 அணிகள் பங்கேற்றன. பெண்கள் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் பி.எஸ்.ஜி. கல்லுாரி அணி, 50 - 25 என்ற புள்ளிக் கணக்கில் பெர்க்ஸ் கூடைப்பந்து அணியை வென்றது. சி.சி.எம்.ஏ., அணி 64 - 31 என்ற புள்ளிக் கணக்கில் யுனைடெட் அணியை வென்றது. சதர்ன் வாரியர்ஸ் அணி 66 - 41 என்ற புள்ளிக் கணக்கில் ஒய்.எம்.சி.ஏ. அணியை வென்றது. ஜாசா அணி 72 - 31 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்.வி.ஜி.வி. ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. (கோவை லோக்கல்)
வாசகர் கருத்து