மாவட்ட செய்திகள் ஜூலை 22,2022 | 00:00 IST
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடக்கிறது. 188 நாடுகள் பங்கேற்கும் இதனை பிரதமர் துவக்கி வைக்கிறார். இதையொட்டி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது கடலூர் மாவட்டம், விருத்தாசலம் இன்பேண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு போட்டியை பள்ளி தாளாளர் விஜயகுமாரி துவக்கி வைத்தார். அதில் 188 மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விருத்தாசலம் மினி விளையாட்டு அரங்க பொறுப்பாளர் அறிவழகன் உட்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்
வாசகர் கருத்து