மாவட்ட செய்திகள் ஜூலை 22,2022 | 00:00 IST
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் தமிழிசை, புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள 75 அரசு பள்ளிகளில் ஆய்வு செய்யும் பணியை துவக்கி உள்ளார் புதுச்சேரி, கிருமாம்பாக்கம் நரம்பை, பிள்ளையார் குப்பம், மணப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஆய்வு செய்தார். கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளிக்கு சென்ற தமிழிசையை, மாணவ-மாணவிகள் மயிலாட்டம்,பொய்க்கால் குதிரை தப்பாட்டம், மேளதாளம் முழங்க வரவேற்றனர்.. நரம்பை அரசு தொடக்கப் பள்ளியில், மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஊமை நாட்கத்தை பார்த்த கவர்னர், மாணவர்களை பாராட்டினார் மணப்பட்டு அரசு பள்ளியில், ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவர்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த பாரம்பரிய உணவுப்பொருள் காட்சி நடைபெற்றது- கல்வி கற்பது மற்றும் சத்தான உணவு உட்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களுடன் கவர்னர் கலந்துரையாடினார். எம்.எல்.ஏ.,க்கள், லட்சுமிகாந்தன், செந்தில்குமார் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து