மாவட்ட செய்திகள் ஜூலை 22,2022 | 00:00 IST
கோவை மாவட்ட சைக்கிள் போலோ அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு சைக்கிள் போலோ அசோசியேஷன் சார்பில், 'நேஷனல் சைக்கிள் போலோ பெடரேஷன்' கோப்பைக்கான தேசிய அளவிலான போட்டிகள் நாராயணகுரு பாலிடெக்னிக் கல்லுாரி மைதானம் மற்றும் கோவைப்புதுார் 'ஏ' மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் எட்டு அணிகளும், பெண்கள் பிரிவில் ஒன்பது அணிகளும் பங்கேற்றன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்கள் பிரிவு லீக் போட்டியில் சட்டீஸ்கர் மாநில அணி 9 - 2 என்ற கோல் கணக்கில், உத்தரபிரதேஷ் அணியை வீழ்த்தியது. சட்டீஸ்கர் அணியின் பிரீத்தி மூன்று கோல்கள் எடுத்தார். மற்றொரு போட்டியில் தமிழக அணி 13 - 1 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணியை வீழ்த்தியது. தமிழக அணியின் ரஷ்மி மற்றும் சத்தியா தலா நான்கு கோல்கள் எடுத்து அசத்தினர். ஆண்கள் பிரிவில் விமானப்படை அணி 7 - 5 என்ற கோல் கணக்கில், ராணுவ அணியை வீழ்த்தியது. விமானப்படை அணியின் அசாருதீன் நான்கு கோல்கள் எடுத்து அசத்தினார். உத்திரப் பிரதேச அணி 12 - 1 என்ற கோல் கணக்கில், மகாராஷ்டிரா அணியை வீழ்த்தியது. உத்திரப் பிரதேச அணியின் ராகுல் பிந்த் நான்கு கோல்கள் எடுத்து அசத்தினார். லீக் சுற்றுப் போட்டியில் அதிக புள்ளிகள் எடுக்கும் நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவர்.
வாசகர் கருத்து