மாவட்ட செய்திகள் ஜூலை 23,2022 | 13:52 IST
சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணிய சிவாவின் 97-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்ரமணிய சிவா மணிமண்டபத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் மலர்மாலை வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவு மண்டப வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டனர். எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, சப் கலெக்டர் சித்ரா விஜயன், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து