பொது ஜூலை 23,2022 | 14:12 IST
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் ஆடி கிருத்திகை விழா வியாழனன்று தொடங்கியது. கிருத்திகையான இன்று முருகனை தரிசிக்க பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த லட்சக் கணக்கான பக்தர்கள் திரண்டனர். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். வழக்கத்துக்கு அதிகமாக பக்தர்கள் குவிந்து வருவதால் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து