Advertisement

ஆசிரியர்கள் இல்லை 112 மாணவர்களின் கல்வி கேள்விக்குறி

மாவட்ட செய்திகள் ஜூலை 23,2022 | 15:20 IST

Share

104 ஆண்டு பழமையான பள்ளியின் அவலம் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடி லோயர் பெக்கியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 104 ஆண்டு பழமையான இப்பள்ளியில் பழங்குடியினர், தோட்டத் தொழிலாளிகளின் குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 3 ஆசிரியர்கள் வேலை பார்த்தனர். 2015 ம் ஆண்டு 2 ஆசிரியர்கள் டிரான்ஸ்ஃபரில் சென்றனர். அதன் பின்பு புதிய ஆசிரியர்களை நியமிக்கவில்லை. 112 மாணவ, மாணவியர் படிக்கும் இப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு ஆசிரியர் மட்டுமே பணிக்கு வருகிறார். மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. மாணவர்கள் நலன் கருதி கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X