பொது ஜூலை 24,2022 | 08:33 IST
சென்னை காசிமேட்டில் நள்ளிரவு முதலே மீன் பிரியர்கள் குவிந்தனர். ஞாயிறு விடுமுறை என்பதாலும், ஆடியில் அம்மனுக்கு மீன் படைப்பது வழக்கம் என்பதாலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மீன் விலை உயர்ந்திருந்தது. வஞ்சிரம், வவ்வால், கொடுவா, சீலா, கானாங்கத்தை போன்ற மீன்கள் அதிகம் வந்தன. ஒரு கிலோ வஞ்சிரம் 1500, கொடுவா 100, வவ்வால் 900, கடம்மா 400, நெத்திலி 400 ரூபாய் வரை விற்றது. இறால், நண்டு 600 ரூபாய் வரை விலை போனது.
வாசகர் கருத்து