மாவட்ட செய்திகள் ஜூலை 24,2022 | 15:53 IST
எதிர்கட்சி துணை தலைவர் ஆனதும் மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் அம்மா கோயிலில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு உதயகுமார் மாலை அணிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க பழனிசாமிக்கு மட்டும் தான் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டது. பன்னீர்செல்வத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தையை மூத்த நிர்வாகிகள் நடத்தினர். அவர் உதாசீனப்படுத்தினார். தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்தை கேட்காமல் சர்வாதிகார போக்குடன் செயல்பட்டார். இன்று அவர் அரசியல் அனாதையாகிவிட்டார் என உதயகுமார் பேசினார்.
வாசகர் கருத்து