பொது ஜூலை 25,2022 | 08:33 IST
சென்னையில் இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அமோகமாகி உள்ளது. பள்ளி, கல்லுாரி மற்றும் மாநகராட்சி கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் போதை பொருள் விற்பனை நடப்பதை போலீசார் கண்டறிந்தனர். அந்த இடங்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குட்கா, மாவா விற்பனை தடுப்பு பிரிவு தனிப்படை கடந்த 7 நாட்களாக, ஆர்.கே.நகர், அசோக் நகர் உள்ளிட்ட சில இடங்களில் சோதனை நடத்தி, 105 வழக்குகள் பதிவு செய்து, 107 பேரை கைது செய்தனர். 56 கிலோ குட்கா, 28 கிலோ மாவா மற்றும் மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ”நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப் பரவலாக போதை கலாசாரம் சென்னையில் வேர் விட்டிருக்கிறது” என ஒரு உயர் போலீஸ் அதிகாரி கவலையுடன் சொன்னார்.
வாசகர் கருத்து