அரசியல் ஜூலை 25,2022 | 14:09 IST
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா 28ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வருகிறார். மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பிரதமரின் 2 நாள் பயணத்தையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நேரு ஸ்டேடியம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. மத்திய, மாநில போலீசாரின் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் முதல் நேரு ஸ்டேடியம் வரையும், கவர்னர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 28, 29 ஆகிய 2 தேதிகளில் சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து