மாவட்ட செய்திகள் ஜூலை 26,2022 | 12:12 IST
சென்னையில் 28ஆம் தேதி 44 ஆவது ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. இதனையொட்டி செஸ் ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் பாலசுப்பிரமணியம், எஸ்பி சக்தி கணேசன், மேயர் சுந்தரி உள்ளிட்டோர் பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணி அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி கடலூர் கடற்கரையை அடைந்தது. பின்னர் தேசிய விளையாட்டு வீரர்கள் மீண்டும் ஜோதியை கலெக்டரிடம் ஒப்படைத்தனர். ஜோதி சென்னை கொண்டு செல்லப்பட்டது.
வாசகர் கருத்து