மாவட்ட செய்திகள் ஜூலை 26,2022 | 12:27 IST
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று 1வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதேபோன்று இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் என மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து