மாவட்ட செய்திகள் ஜூலை 26,2022 | 00:00 IST
கோவை மாவட்டத்தில் போதை ஊசிகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. போதைப் பொருள் பயன்படுத்துவது தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டாலும், போதை ஊசி பயன்படுத்துவது தொடர்பாக எந்த வழக்குகளும் பதியாமல் இருப்பதும், வலி நிவாரணி மாத்திரைகளை பொடியாக்கி, ஊசி மூலம் செலுத்தி போதை கொள்வதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.போதை ஊசிகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள், மனநிலை மாற்றங்கள் குறித்து மருத்துவர்கள் விளக்குவதே இந்தப் பதிவு.
வாசகர் கருத்து