Advertisement

புதுச்சேரியில் ரவுடிகளை ஒடுக்க சிறப்பு நடவடிக்கை

மாவட்ட செய்திகள் ஜூலை 26,2022 | 12:55 IST

Share

புதுச்சேரி டிஜிபியாக கடந்தாண்டு பொறுப்பேற்ற ரன்வீர் சிங் கிருஷ்ணியா தற்போது டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய டிஜிபியாக மனோஜ்குமார் லால் நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த அவர் நேற்று மாலை புதுச்சேரி டிஜிபியாக பதவியேற்றார். அவரிடம் ரன்வீர் சிங் கிருஷ்ணியா பொறுப்புகளை ஒப்படைத்தார். முன்னதாக அவருக்கு காவல்துறை தலைமையகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இன்று காலை முதல்வர் ரங்கசாமியை மனோஜ்குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X