மாவட்ட செய்திகள் ஜூலை 26,2022 | 14:51 IST
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் 25 க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் பெயின்ட் மூலம் கோயில் முழுவதும் வண்ணக் கோலங்கள் வரைந்து அழகிற்கு அழகு சேர்த்தனர். இந்த கலைக்குழுவை வழி நடத்துபவர் 80 வயது நிரம்பிய மதுரையை சேர்ந்த லீலா வேங்கட்ராமன். தள்ளாத வயதிலும் தளராமல் தெய்வீகப் பணியில் தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளார். கோயில் திருப்பணிகளில் ஆர்வம் கொண்ட சிறுமிகள், பெண்களை அடையாளம் கண்டு தெய்வீகக் கலைச்சேவையில் ஈடுபடுத்தி வருகிறார். அதற்கான பயிற்சியையும் இலவசமாக அளித்து வருகிறார். 4 வயது சிறுமிக தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள புகழ் பெற்ற பல கோயில்களில் தனது குழுவினருடன் சென்று நுட்பமான கோலங்களை வரைந்து அசத்தி வருகிறார். ஏழு ஸ்வரங்களுக்கும், கோலத்திற்கும் உள்ள தொடர்பையும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது தெய்வீகக் கலைச் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
வாசகர் கருத்து