Advertisement

மாநில டென்னிஸ் எகிறி அடித்து வீரர்கள் அபாரம் | Dinamalar Sports News

மாவட்ட செய்திகள் ஜூலை 26,2022 | 00:00 IST

Share

கோவையில் பெர்க்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியருக்கான மாநில டென்னிஸ் போட்டி உப்பிலிபாளையம் பெர்க்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒற்றையரில் 8, 19, 12, 14 மற்றும் 18 ஆகிய வயது பிரிவுகளிலும், இரட்டையரில் 12, 18 ஆகிய வயது பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றையர் பிரிவில் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில் முகமது யாபி 2 - 0 என்ற நேர் செட் கணக்கில் ஆர்யாவை வென்றார். 10 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில் ஜெகன் ரோகித் 2 - 1 என்ற செட் கணக்கில் யுகந்தரை வென்றார். 12 வயது பிரிவில் ஸ்காந்தா நிதி 7 - 1 என்ற புள்ளிக் கணக்கில் தியா இனியாளை வென்றார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுமியர் பிரிவில் சாத்விகா 8 - 3 என்ற புள்ளிக் கணக்கில் தியா இனியாளை வென்றார். 12 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் ஸ்காந்தா நிதி மற்றும் முகமது யாபி ஜோடி 7 - 5 என்ற புள்ளிக் கணக்கில் தியா இனியாள் மற்றும் மகிதாவை வீழ்த்தினர். 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில், யஷ்வந்த் மற்றும் கவின்ராஜ் ஜோடி 7 - 4 என நிரஞ்சேஷ் மற்றும் நீலேஷ் ஜோடியை வீழ்த்தினர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X