மாவட்ட செய்திகள் ஜூலை 27,2022 | 00:35 IST
புதைத்து வைத்த நகைகள் மீட்பு திருச்சி அருகே மண்ணச்சநல்லுாரை சேர்ந்தவர் ராதா. காளவாய்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். கடந்த 20 ம் தேதி மதியம் ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்றார். அவரை பைக்கில் பின் தொடர்ந்த மர்ம நபர் இருவர் ராதாவை வழிமறித்து, அவர் அணிருந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து தப்பினர். அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திலகன், கூட்டாளி முருகானந்தம் ஆகியோரை கைது செய்தனர். திலகன் தனது வீட்டின் அருகில் உள்ள மின் கம்பத்தின் கீழே குழியை தோண்டி தாலி சங்கிலியை புதைத்து வைத்திருந்தான். அதை போலீசார் மீட்டனர்.
வாசகர் கருத்து